BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நாட்டு வெடிகுண்டை உணவு என நினைத்து கடித்த பசு, வாய் சிதறி பரிதாப பலி.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, சேஷன் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 41). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். தனது வீட்டு பண்ணையில் 3 பசு மாடுகளை வளர்ந்து வந்த தர்மலிங்கம், இன்று வழக்கம்போல மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.
அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ந்துகொண்டு இருந்த பசு, நாட்டு வெடிகுண்டை உணவு என நினைத்து கண்டித்துள்ளது. இதனால் நாட்டு வெடிகுண்டு வெடிக்கவே, பசுமாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதறி இரத்தம் வெளியேறி பரிதாபமாக பசு உயிரிழந்தது.

இந்த விஷயம் தொடர்பாக பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், சிலர் காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு உபயோகம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலும் மாடுகள் உயிரிழந்தது. வனத்துறையும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.