இளம் பெண்ணின் தோழிகளின் அந்தரங்க புகைப்படத்தை பார்க்க ஆசைப்பட்ட இளைஞர்.. விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

இளம் பெண்ணின் தோழிகளின் அந்தரங்க புகைப்படத்தை பார்க்க ஆசைப்பட்ட இளைஞர்.. விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்



engineer-arrested-who-intimidating-young-girls-at-chenn

கல்லூரி மாணவிகளை காதலித்து, திருமண ஆசை காட்டி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார் பேட்டை, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் அருண் கிறிஸ்டோபர் (வயது 25). ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள இவர் தற்காலிகமாக மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையியல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு கணக்குகளை தொடங்கி பல்வேறு இளம் பெங்களுக்கு வலை விரித்துள்ளார் அருண் கிறிஸ்டோபர்.

தான் ஒரு விமான பைலட் என இளம் பெண்களிடம் கூறி காதல் வலை வீசியுள்ளார். இவரது வலையில் விழும் பெண்களிடம் உன்னை காதலிப்பதாகவும், உன்னையே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, அவர்களின் அந்தரங்க படங்களை வாங்கி ரசித்துவந்துள்ளார்.

இப்படியே சென்றுகொண்டிருந்தநிலையில் இவரது வலையில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடமும் இதேபோன்று பேசி அவரின் அந்தரன் புகைப்படங்களை வாங்கியுள்ளார். அந்த பெண்ணின் அந்தரங்கத்தை மட்டும் பார்த்தது இல்லாமல், அந்த பெண்ணின் தோழிகளின் தொலைபேசி எண்ணை தனக்கு தரும்படியும், அவர்களின் அந்தரங்கத்தை தான் பார்க்கவேண்டும் எனவும் அருண் கிறிஸ்டோபர் அந்த இளம் பெண்ணை தொல்லைசெய்துள்ளார்.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, தோழிகளின் தொலைபேசி எண்ணை தராவிட்டால் உனது அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என அருண் கிறிஸ்டோபர் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த பெண் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து அந்த பெண் தனது தந்தையிடம் கூற, அவர் இதுகுறித்து அடையாறு துணை போலீஸ் கமிஷனர் விக்ரமனிடம் புகார் கொடுத்துள்ளார். துணை போலீஸ் கமிஷனர் விக்ரமன் உடனே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து அடையாறு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்ஜினீயர் அருண் கிறிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுபோன்று இளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோல் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தனது செல்போன் எண் 87544-01111-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும், புகார் தெரிபவர்களின் தகவல் பாதுகாக்கப்படும் எனவும் துணை கமிஷனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.