தமிழகம்

தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்! தேர்தலுக்கான தேதி அறிவிப்பு!

Summary:

election date announced


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  டிசம்பர் 27 மற்றும் 30 ந்தேதிகளில் 2 கட்டமாக  நடைபெறும் என்றும். அதற்கான அறிவிப்பாணை  டிசம்பர்  6 ஆம் தேதி   வெளியிடப்படும் என்றும். உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ஆம் தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13, வேட்பு மனுக்களை திரும்ப பெற  டிசம்பர் 18ம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. 


Advertisement