ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது நிதியமைச்சர் இப்படி செய்யலாமா.! அதனால் தான் நாங்கள் இப்படி செய்தோம்.! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பன்னீர்செல்வம் பேசும்போது, பதிலளிக்காமல் நிதியமைச்சர் பேப்பரை தூக்கி வீசிவிட்டு வெளியேறினார். சபையின் கண்ணியத்திற்கு குறைவாக இருந்ததாலும், திட்டமிட்டு வெளியேறி எதிர்க்கட்சிகளை அவமானபடுத்தியதாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துகளை ஏற்க அவர் மறுக்கிறார். பன்னீர்செல்வம் கருத்துக்கு பதிலளித்திருக்க வேண்டும். சட்டசபையில் அவமானபடுத்தும்போது, எப்படி அமர முடியும். பொது மக்களின் பிரச்னைகள், எண்ணங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு எதிர்க்கட்சிகள் கொண்டு வரும். சபாநாயகர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.