#Breaking: திமுக கொடிக்கம்பங்களை அகற்றுக - துரைமுருகன் உத்தரவு..!

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கினை அவித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்றிட வேண்டும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைகளுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அந்தத் தீ்ர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிகள் கொண்ட அமர்விலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, ஊரக நெடுஜாளை, ள்ளச்சி துறைக்கு சொந்தமான இடத்திலும், பொது இடத்திலும் வைத்துள்ள கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும்.
இதையும் படிங்க: நாய் கடித்து உயிரிழந்த மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு.. சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு.!
மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, நாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கம்பங்கள் குறித்த விபரத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு ரேஷன் கடை பொருட்கள் வீடு வீடாக விநியோகம் எப்போது? - அமைச்சர் சக்கரபாணி குட் நியூஸ்.!