அரசியல் தமிழகம்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையில், இலங்கை அகதிகள் குறித்த முக்கிய தகவல்!

Summary:

Dual citizenship for ilangai tamils


தமிழகத்தில்‌ 15-ஆவது சட்டப்பேரவையின்‌‌ எட்டாவது கூட்டத்‌தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை தொடங்கினார்.

இதற்காக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலை 9.50 மணி அளவில் தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்தார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

கூட்டத்தில் பேசிய ஆளுநர், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு குறிப்பிட்டார். சட்டசபையில் ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தை பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சை நிறைவு செய்யும்போது, தனது உரையை சபாநாயகர் ப.தனபால் தமிழில் வாசிப்பார் என்று கூறி, தமிழ் இனிமையான மொழி  அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினர். ஆளுநரின் உரையில், இலங்கை அகதிகள் குறித்து இடம் பிடித்த தகவல் பெரும் கவனம் பெற்றுள்ளது.


Advertisement