மது போதையில் தகராறு.. பாஜக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள்!Drunken boys attack BJP Admin in Vellore

வேலூர் அருகே மதுபானையில் பாஜக நிர்வாகியை தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மண்ணடி தெருவை சேர்ந்தவர் லோகேஷ் குமார். இவர் வேலூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி அசோக் குமார் என்பவரிடம் நேற்று முன்தினம் இரவு சாப்பிட சென்றுள்ளார்.

vellore

அதன்படி ஆம்பூர் அடுத்த குளிதிகை பெட்ரோல் பங்க் அருகே உள்ள தாபா ரெஸ்டோ பாருக்கு சென்றுள்ளார். அப்போது லோகேஷ் குமாரும், அசோக் குமாரும் அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த 3 இளைஞர்களுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் லோகேஷ் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

vellore

இதனையடுத்து லோகேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய வேலூர் மாவட்டம் வளத்தூர் புதுமணியை சேர்ந்த பாபு, இஸ்மாயில், வசீம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.