தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள்! விரக்தியில் குடிமகன் எடுத்த விபரீத முடிவு!



Drunk addict man died

சென்னை திருவொற்றியூரில் மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ம் தேதி வரை டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் பலர் குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர் விநாயகபுரம் தெருவைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய வீரபத்திரன் என்பவர் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.

Tasmak

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரபத்திரன், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாக மது குடிக்க முடியாமல் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த வீரபத்திரன், திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கீழே விழுந்து படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.