வெங்காயத்தை விடுங்க! ஒரு கிலோ முருங்கை காய்யின் விலை என்ன தெரியுமா? அடேங்கப்பா!

வெங்காயத்தை விடுங்க! ஒரு கிலோ முருங்கை காய்யின் விலை என்ன தெரியுமா? அடேங்கப்பா!


drumstick-price-increased

பொதுவாக மழைக்காலம் என்றாலே அத்தியாவசிய பொருட்களான வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விளைச்சல் குறைந்து விலை ஏறுவது வழக்கமான ஓன்று. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை 150 , 160 , 200 ரூபாய் என உச்சத்தை தொட்டுள்ளது.

தற்போது தக்காளியின் விலையும் சற்று உயர தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் முருங்கை காயின் விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாகக் காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கையின் விலையானது ரூ.600 கு விற்பனை  செய்யப்பட்டுவருகிறது.

முருங்கை காயின் இந்த திடீர் விலை ஏற்றதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.