திடீரென மாயமாய் போன தமிழ் நடிகை.! ஆடிப்போய் கதவை திறந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

திடீரென மாயமாய் போன தமிழ் நடிகை.! ஆடிப்போய் கதவை திறந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!


drama-artist-commit-suicide

பனம்பாக்கம் அருகே பாணாவரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கோதண்டம் மற்றும் சாந்தா தம்பதியினர். இவர்கள் பாணாவரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இட்லிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பிரியா என்ற 19 வயது மகள் உள்ளார். அவர் திருவிழாக்களில் குழுவுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் அவ்வப்போது தனது தாயாருக்கு இட்லி கடையில் உதவியாகவும் இருந்துள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் இட்லி கடையில் இருந்து சாந்தா வீட்டிற்கு சென்றபோது வீட்டில் இருப்பதாக கூறிய பிரியா வீட்டில் இல்லை. மேலும் அக்கம் பக்கத்திலும் யாரும் பார்க்கவில்லை என கூறிய நிலையில் அவர் நாடகத்திற்கு நடிக்க சென்றிருப்பார் என சாந்தா அசால்டாக இருந்துள்ளார்.

suicide

இந்நிலையில் அவரது வீட்டில் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் நேற்று அந்த அறையிலிருந்து மோசமான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தா கதவை திறக்க முயற்சி செய்தபோது அதன்  உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்தபோது அங்கு பிரியா தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியில் சாந்தா கதறி அழுதுள்ளார்.

suicideபின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.