தமிழகம் மருத்துவம்

பிகில் படத்தைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.! விஜய்க்கு இவ்வளவு பவரா.?

Summary:

சென்னை மயிலாப்பூரில் பகுதியை சேர்ந்த சசிவர்ஷன் என்ற 10 வயது சிறுவன் அவரது மாமா அரவிந்துடன்

சென்னை மயிலாப்பூரில் பகுதியை சேர்ந்த சசிவர்ஷன் என்ற 10 வயது சிறுவன் அவரது மாமா அரவிந்துடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

மருத்துவமனையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்திற்கு தையல் போட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி செலுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் பயத்தில் சிறுவன், வலியில் துடித்தாலும் பரவாயில்லை, ஊசி மட்டும் போட விட மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார்.

அப்போது இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர் சிறுவனின் கவனத்தை மாற்றுவதற்காக உனக்கு என்ன பிடிக்கும்? எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுவன், நடிகர் விஜய் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என வலியால் அழுதுகொண்டே கூறியுள்ளான். இதனையடுத்து ஜின்னா தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். 

படத்தை பாக்க ஆரம்பித்த சிறுவன் தன்னை மறந்து பிகில் படத்தை பார்த்து ரசித்துள்ளான். இதனைப்பயன்படுத்திக்கொண்ட மருத்துவர்கள் இது தான் சரியான நேரம் என்று ஊசி போட்டு, தையல் போட்டு சிகிச்சை அளித்துவிட்டனர். ஊசியே வேண்டாம் என்று அடம் பிடித்த சசிவர்ஷன் தையல் போட்டபோது கூட எதிர்க்காமல் பிகில் படத்தை ஆர்வமாக பார்த்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்த விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெருமையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement