அரசியல் தமிழகம் Covid-19 TN Election 2021

சூறாவளி பிரச்சாரம் செய்துவந்த திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!! அதிர்ச்சியில் தொண்டர்கள்..

Summary:

திமுக கட்சியின் மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யும் ஆன கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய

திமுக கட்சியின் மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யும் ஆன கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக, அதிமுக ஆகிய பிரதான காட்சிகள் தொடங்கி சுயேட்சை வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சியின் மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யும் ஆன கனிமொழி அவர்கள் திமுக சார்ப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட கனிமொழி, சென்னை திரும்பியதும் தனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதியானதை அடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Advertisement