அரசியல் தமிழகம்

இந்த தொகுதியை தி.மு.க.வுக்கு தான் ஒதுக்க வேண்டும்.! தீக்குளிக்க முயன்ற தி.மு.க.தொண்டர்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் கடந்த 2 சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க.கூட்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் கடந்த 2 சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இந்தநிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அறந்தாங்கித் தொகுதியிலிருந்து தி.மு.க சார்பில் 57 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர். 

இதனால் இந்த முறை கண்டிப்பாக தி.மு.க-வுக்குதான் சீட் ஒதுக்குவார்கள் என தி.மு.க தொண்டர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அறந்தாங்கித் தொகுதி தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக  தகவல் கசிந்தது. இதனால் விரக்தியடைந்த அறந்தாங்கி தி.மு.க தொண்டர்கள் பலரும், பேருந்து நிலையத்தின் முன்பு குவிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற தி.மு.க.தொண்டர் ராஜா என்பவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி, அறந்தாங்கி தொகுதியை தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும் என கோஷமிட்டவாறு தீக்குளிக்க முயன்றார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அவர் மீது தண்ணீர் ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement