தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை தேதிகள் வெளியாகி உள்ளது!

Summary:

diwali leave for school


இந்தவருடம் விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தொடர் விடுமுறை இருந்ததால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் இந்தநிலையில் இந்தவருடம் தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 26ஆம் தேதி பள்ளி வேலைநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீபாவளி ஞாயிற்று கிழமை வருவதால் சற்று அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்தாண்டுவரை ஆண்டு முழுவதும் பள்ளி பணிநாட்களின் அட்டவணையை பள்ளிகளுக்கு அனுப்பி வந்தது. மழை, வெயில் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிடப்படாத விடுமுறைகள் அளிக்கப்படுவதால், பணி நாட்களை அதற்கேற்றார் போல அட்டவணைப்படுத்த ஒவ்வொரு மாதமும் பணி நாட்கள் அட்டவணை இந்தாண்டு முதல் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் அக்டோபர் மாதத்திற்கு அனுப்பப்பட்ட அட்டவணையில், திபாவளிப் பண்டிகை நாளான அக்டோபர் 27ஆம் தேதிக்கு முந்தைய நாள் பணி நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வ்வந்த பல் பண்டிகைகளுக்கும் தொடர் விடுமுறை விடவேண்டிய சூழ்நிலை உறவான நிலை ஏற்பட்டதால் பணி நாட்களை சரிசெய்ய இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

 இந்த நிலையில், அக்டோபர் 26, 27 பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை என்றும், அக்டோபர். 28-ம் தேதி பள்ளி வேலைநாள் என்பதால், விடுமுறை தேவைப்படும் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


Advertisement