மகளை காணாமல் கலங்கிய பெற்றோர்: கடத்திய சிறுவனிடமிருந்து பத்திரமாக மீட்ட போலீசார்..!

மகளை காணாமல் கலங்கிய பெற்றோர்: கடத்திய சிறுவனிடமிருந்து பத்திரமாக மீட்ட போலீசார்..!


Distraught parents rescued their daughter safely from the abducted boy

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்த சிறுமி (17). இவர் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி வேலை நேரம் முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும்  சிறுமி கிடைக்காததால், மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான சிறுமியை தேடினர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியுடன் பணிபுரிவோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரை வடக்கு மேலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட சிறுமியையும், அவரை கடத்திய சிறுவனையும் பிடித்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தனது தவறை சிறுவன் ஒத்துக் கொண்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பண்ருட்டி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இதன் பின்னர் அந்த சிறுமிக்கு அறிவுறை கூறிய காவல்துறையினர், அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.