"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
கள்ளகாதலுக்கு இடையூறு....!! காதல் கணவரை கூலிப்படைய ஏவி கொல்ல முயன்ற கொடூரம்...!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அழகு சுந்தரபாண்டி (32), இவர் ஒரு விவசாயி. சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 2014 ஆம் வருடம் இவரும், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த புனித ஆனி எப்சிபா (29) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி இரவு 7 மணியளவில் அழகு சுந்தரபாண்டி வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சங்கலிங்கபுரம் விலக்கில் சென்ற போது, அவரது கிராமத்தைச் சேர்ந்த மாரிராஜ் (31) என்பவர் அவருடன் பேசிக் கொண்டே வந்துள்ளார்.
திடீரென மாரிராஜ் அங்கேயே நின்று விட, அழகு சுந்தரபாண்டி தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். சல்லிசெட்டிபட்டி கிராமத்திற்கு அருகில் சென்றபோது, இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் முகப்பு விளக்கு போடாமல் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
அப்போது திடீரென்று அவர்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து அழகு சுந்தரபாண்டி மீது வீசியுள்ளனர். ஆனால் குறி தவறி அரிவாள் கீழே விழுந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அழகு சுந்தரபாண்டி மர்மநபர்கள் தன்னை வெட்டிக் கொல்ல முயன்றதை அறிந்துகொண்டு பைக்கை வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் மர்மநபர்கள் கீழே விழுந்த அரிவாளை எடுத்துக்கொண்டு அவரை துரத்திச் சென்று வெட்டியுள்ளனர். இதில் அழகு சுந்தரபாண்டிக்கு மார்பு பகுதியில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அழகு சுந்தரபாண்டி பைக்கை திருப்பி, அருகே உள்ள பெட்டிக்கடைக்கு ஓட்டி சென்றுள்ளார். அதற்குள் பொதுமக்கள் சிலரும் அங்கு வந்ததால். மர்மநபர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காயமடைந்த அழகு சுந்தரபாண்டி சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், அழகு சுந்தர பாண்டியை அவரது மனைவி புனித ஆனி எப்சிபா தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற தகவல் தெரியவந்தது.
சம்பவத்தன்று அழகு சுந்தரபாண்டியுடன் பேசிக்கொண்டே வந்த மாரிராஜூக்கும், அழகு சுந்தரபாண்டியின் மனைவி புனித ஆனி எப்சிபாவுக்கும் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
கள்ளக்காதலுக்கு தனது கணவர் இடையூறாக இருந்ததால், அவரை தீர்த்துக்கட்ட புனித ஆனி எப்சிபா மாரிராஜ் (31) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (20) என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மதுரையை சேர்ந்த கூலிப்படையினருக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பேரம் பேசி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து உள்ளனர். இதைத் தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேர் அழகு சுந்தரபாண்டியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, புனித ஆனி எப்சிபா, மாரிராஜ், சரவணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். புனித ஆனி எப்சிபா நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும், மற்ற இருவரும் கோவில்பட்டி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மேலும் காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.