தமிழகம் சினிமா

அதிர்ச்சி!! இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று!!

Summary:

டைரக்டர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள

டைரக்டர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தமிழ் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவரது மகன் சாந்தனு பாக்யராஜ், "என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம்.

கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்." என பதிவிட்டுள்ளார்.


Advertisement