"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
மாமியாரிடம் தகராறு செய்த கும்பல்... தட்டி கேட்ட மருமகனுக்கு நிகழ்ந்த சோகம்...
திண்டுக்கல் மாவட்டம் உண்டாரபட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின்ஜோஸ்வா - கிறிஸ்டி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜோஷ்வாவின் மாமியாரிடம் அதே பகுதியில் சேர்ந்த சிலர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நேற்று அதே கும்பல் ஜோஸ்வாவின் மாமியாரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததுடன் அவரின் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜோஸ்வாவிடம் அவரது மாமியார் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த கும்பலை தேடி ஜோஸ்வா சந்தானவர்த்தினி ஆற்றுபாலம் அருகே உள்ள பகுதிக்கு சென்று மாமியாரின் செல்போனை கேட்டுள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஜோஸ்வாவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ஜோஸ்வாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோஸ்வா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.