கள்ளக்காதல் தகராறில் பெண்ணின் பெற்றோருக்கு அரிவாள்வெட்டு - கள்ளகாதலனுக்கு தர்ம அடி கொடுத்து அலறவிட்ட பொதுமக்கள்.!

கள்ளக்காதல் தகராறில் பெண்ணின் பெற்றோருக்கு அரிவாள்வெட்டு - கள்ளகாதலனுக்கு தர்ம அடி கொடுத்து அலறவிட்ட பொதுமக்கள்.!


dindigul-vedasandur-affair-man-murder-attempt-girls-par

கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்த பெண்ணின் தாய் - தந்தையை கயவன் அரிவாளால் வெட்ட, கொடூரனை பிடித்த பொதுமக்கள் வெறிதீர அடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், பாச்சலா கவுண்டனூரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரின் மனைவி ராணி. தம்பதிகளின் மகள் உமா. இவருக்கு திருமணம் முடித்து 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக உமாவின் கணவர் உயிரிழந்துவிடவே, உமா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்குள்ள அங்கச்சி அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் காளிமுத்து. 

காளிமுத்துவிற்கும் - உமாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் ராஜேந்திரனுக்கு தெரியவந்துள்ளது. இராஜேந்திரன் காளிமுத்துவிடம் இதுகுறித்து கண்டிக்க சென்றசமயத்தில் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இராஜேந்திரன் வீட்டிற்கு வந்த காளிமுத்து, இராஜேந்திரன் மற்றும் ராணியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். 

Dindigul

வெட்டுக்காயத்துடன் அலறித்துடித்த இராஜேந்திரனின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காளிமுத்துவை கட்டிவைத்து நொறுக்கியெடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த வேடசந்தூர் காவல் துறையினர் காளிமுத்துவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இராஜேந்திரன் மற்றும் ராணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்த அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை சிறையில் அடைத்தனர்.