அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
டூ-வீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய்-தந்தை, 2 குழந்தைகள் என குடும்பமே பலி.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெண்டலப்பாறை பகுதியில் வசித்து வருபவர் ஜார்ஜ் (வயது 30). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். ஜார்ஜின் மனைவி அருணா (28). தம்பதிகளுக்கு ரக்ஷிதா என்ற 7 வயது மகனும், ரக்சன் என்ற 5 வயது மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் அருணாவின் தாய் சரோஜாதேவி (60) இருக்கிறார்.
இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், இருசக்கர வாகனத்தில் சரோஜாவை ஏற்றிக்கொண்டு குடும்பத்தினர் நால்வரும் திண்டுக்கல் - நத்தம் சாலையில் பயணம் செய்துள்ளார். இவர்களின் வாகனம் நாலாம்பட்டி பகுதியில் வந்தபோது, எதிர்திசையில் வந்த கார் நொடிப்பொழுதில் ஜார்ஜின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதையும் படிங்க: லாரி மீது டூவீலர் மோதி பயங்கரம்; 17 வயது சிறுவன் பரிதாப பலி., காவல்துறையின் அறிவுரை ஏற்காததால் சோகம்.!
4 பேர் பரிதாப பலி
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில், வேறொரு இருசக்கர வாகன ஓட்டியான குழந்தைசாமி என்பவரும் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் ஜார்ஜ், அருணா, அவரின் 2 குழந்தைகள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து திண்டுக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காரை இயக்கிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தி காயமடைந்த சரோஜா தேவி, குழந்தைசாமி உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: அடிச்சு தூக்கிய சூறைக்காற்று; அரசு பேருந்தின் டாப்பை பிடுங்கிய அசுரக்காற்று.. அலறிய பயணிகள்.!