Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்.!
12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்.!

பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுபவர் பால்சாமி. இவர் கூடுதலாக பள்ளியின் நூலக பொறுப்பையும் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளியில் பயின்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பால்சாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளிடம் இருந்து புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.
ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகளும் தலைமை ஆசிரியர், வேடசந்தூர் மாவட்ட கல்வி அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
இந்த வாக்குமூலத்தை திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, ஆசிரியர் பால்சாமியை பணியிடைநீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி உத்தரவிட்டு இருக்கிறார்.