திடீர் காற்றாற்று வெள்ளத்தில் காருடன் சிக்கிய 6 பேர்.. 2 மணிநேர திக்., திக் சம்பவம்.. கடவுளாக காட்சிதந்த பொதுமக்கள், காவலர்கள்.!

திடீர் காற்றாற்று வெள்ளத்தில் காருடன் சிக்கிய 6 பேர்.. 2 மணிநேர திக்., திக் சம்பவம்.. கடவுளாக காட்சிதந்த பொதுமக்கள், காவலர்கள்.!


Dindigul 6 man Struggled Car under Flood Later They Rescued Safely

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழையானது பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழையும் கொட்டித்தீர்க்கிறது. வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடைவிடாத கனமழை பெய்தது. 

இதனால் வேடசந்தூரில் இருந்து கரூர் செல்லும் தரைப்பாலத்தை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்துகொள்ள, திண்டுக்கல்லில் இருந்து வெள்ளோடு பகுதிக்கு சென்ற சண்முகம் (வயது 55) என்பவர் காரில் தனது குடும்பத்தாருடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். 

இவருடன் வாகனத்தில் பாலசுப்பிரமணி (வயது 16), பாலகிருஷ்ணன் (வயது 34), பாண்டியன் (வயது 42), செல்வராஜ் (வயது 50), மணிகுமார் (வயது 35) ஆகியோரும் இருந்துள்ளனர். இவர்களின் வாகனம் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, உயிர் பயத்தில் அனைவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர். 

அந்த சமயத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு ஆய்வாளர் சுப்பிரமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் சேர்ந்து காருக்குள் தத்தளித்த 6 போரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், காரை டிராக்டரை கயிற்றால் இணைத்து இலாவகமாக வாகனத்தையும் மீட்டனர். 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் 6 பேரும் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.