மருத்துவம் லைப் ஸ்டைல்

தலைவிரித்து ஆடும் சர்க்கரை நோய்.! எளிய வழியில் கட்டுப்படுத்துவது எப்படி.?

Summary:

தலைவிரித்து ஆடும் சர்க்கரை நோய்.! எளிய வழியில் கட்டுப்படுத்துவது எப்படி.?

தற்போது உலகில் இந்தியாவில்தான் அதிகமான மக்கள் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறுகின்றது ஆய்வு. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியாவது இந்நோயில் இருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்கி தவிக்கின்றனர். அவர்களுக்கான அற்புத பரிசுதான் இந்த இயற்கை மருந்துகளான வீட்டு வைத்தியங்கள்.

சர்க்கரை நோய் என்பது ஒரு நபரின் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறைதல் அல்லது அதிகரிக்கும் நிலை. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகின்ற இன்சுலின் ஹார்மோன் சீராக சுரக்காமல் போதல் அல்லது சுரப்பதை நிறுத்துவதால் இந்நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினம்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் ஒரு மாத்திரை என்றே கூறலாம். கொய்யாப்பழம் மற்றும் கொய்யாக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதன் தோலை நீக்கி விட்டு சாப்பிட்டால் இரத்தத்தின் சர்க்கரை உறிஞ்சுதலை குறைக்க உதவுகிறது. குறிப்பாக காயாக சாப்பிடுவது நல்லது.

அதேபோல் கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை கட்டுபடுத்தும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்  கணையத்தில் இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்துகிறது.

கிராமப்புறங்களில் கிடைக்கும் ஆவாரம்பூ சக்கரை நோய்க்கு மிக அதி மருந்தாகும். ஆவாரம்பூவை காயவைத்து அரைத்து பொடி செய்து வாரத்திற்கு ஒரு முறை வெந்நீரில் கலந்து பருகினாலே சர்க்கரை நோய் மிகவும் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது பழக்கத்தையும், புகைப்பழக்கத்தையும்  முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் 90 வயது வரை வாழ்ந்த வரலாறும் உள்ளது. அதற்கு காரணம் அவர்கள் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கம் முறைதான். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கடைப்பிடிக்க வேண்டியது உணவு பழக்கவழக்க முறைதான்.


Advertisement