தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை மரணம்; தாயின் கண்முன்னே துடிதுடித்து பலியான உயிர்..!



dharmapuri-women-baby-died

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்தைச் சார்ந்தவர் குமார். இவர் விவசாயி. குமாரின் மனைவி ஆனந்தி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆனந்திக்கு, பிரசவ வலி ஏற்பட்டு பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். 

இவருக்கு மூன்று நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்று குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படும் நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

இதனால் ஆனந்தி பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது. 

Dharmapuri

சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ஆனந்தியின் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். 

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பேரில் அங்கிருந்து உறவினர்கள் அமைதியாக புறப்பட்டு சென்றார்.