எந்த நேரமும் காதலனுடன் பேச்சு.. படிப்பில் கவனம் செலுத்த பெற்றோர் அறிவுறுத்தியதால் விபரீதம்.. கண்ணீர் சோகம்.!

எந்த நேரமும் காதலனுடன் பேச்சு.. படிப்பில் கவனம் செலுத்த பெற்றோர் அறிவுறுத்தியதால் விபரீதம்.. கண்ணீர் சோகம்.!


Dharmapuri Palacode College Girl Suicide parents Advice Concentrate Study

படிப்பில் கவனம் செலுத்தாமல் எந்நேரமும் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த மகளை பெற்றோர் கண்டித்த நிலையில், மனதுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரின் மகள் லலிதா (வயது 19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2 ஆம் வருடம் பயின்று வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரே சமூகத்தார் என்பதால் தமிழ்ச்செல்வனின் வீட்டார் லலிதாவின் வீட்டிற்கு சென்று வரன் கேட்டுள்ளனர். மகள் கல்லூரியில் படித்து வருவதால் தற்போதைக்கு திருமண பேச்சு வேண்டாம் என்று லலிதாவின் பெற்றோர் கூறியுள்ளனர். 

Dharmapuri

மேலும், மகளுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் பற்றி பேசலாம் என்று தெரிவிக்கவே, லலிதா தமிழ்செல்வனுடன் அவ்வப்போது செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கவனித்த பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்தக்கூறி அறிவுறுத்தியுள்ளனர். 

இதனால் மனமுடைந்துபோன லலிதா, நேற்று இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் எழுந்து பார்த்த பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.