தாயின் கையில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை: அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி..!Dharmapuri Nallampalli Baby Died 

 

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி, ஈச்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி. தம்பதிகளுக்கு மூன்று வயதுடைய பிரித்திகா என்ற மகள் இருக்கிறார். 

நேற்று இரவு நேரத்தில் ஈச்சம்பட்டியில் இருந்து நாகாவதி அணை நோக்கி மூர்த்தி மற்றும் அவரது மனைவி, குழந்தை, உறவினர் தசரதன் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அந்த சமயத்தில், ஏலகிரி எள்ளு குழி பகுதியில் இருந்து பயணித்த அரசு பேருந்தை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் முந்திச்செல்லும்போது, கையில் இருந்த குழந்தை தவறுதலாக கீழே விழுந்ததாக தெரிய வருகிறது. 

அச்சமயம், பின்னால் வந்த பேருந்து மோதியதில் நொடியில் சிறுமி பிரித்திகா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தொப்பூர் காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.