மரத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர்... பதறிப்போன குடும்பத்தினர்.. பதறவைக்கும் சோகம்...!Dharmapuri Man Suicide on Tree

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, நாகர்கூடல் பகுதியை சார்ந்தவர் செல்வம் (வயது 56). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், நாகர்கூடல் பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் செல்வம், அவ்வப்போது அங்குள்ள வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு சென்று வருவதாகவும் தெரியவருகிறது. 

Dharmapuri

சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் அவ்வப்போது சுற்றிவந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.