பன்றி வெட்டும் கத்தியால் பயங்கரம்.. துள்ளத்துடிக்க நடந்த கொலை., கைகலப்பில் பரபரப்பு சம்பவம்.!

பன்றி வெட்டும் கத்தியால் பயங்கரம்.. துள்ளத்துடிக்க நடந்த கொலை., கைகலப்பில் பரபரப்பு சம்பவம்.!


dharmapuri-man-murder

மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர் என கணவர் சந்தேகித்ததில், இறுதியில் கணவரின் உயிர் சந்தேக நபரால் பறிபோனது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி, விடிவெள்ளி நகரில் வசித்து வருபவர் முனியப்பன் (வயது 35).. இவர் பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்யும் வேலை செய்கிறார். முனியப்பனின் மனைவி கடந்த 9 மாதத்திற்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்த விசயத்திற்கு முனியப்பனின் உறவினர் ஈஸ்வரனே காரணம் என அவ்வப்போது தெரிவித்து வந்த நிலையில், நேற்று முனியப்பன் - உறவினர் ஈஸ்வரன் இருவரும் மதுபோதையில் எதிரெதிரே சந்தித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதமானது கைகலப்பில் முடியவே, ஆத்திரமடைந்த ஈஸ்வரன் பன்றி வெட்டும் கத்தியால் முனியப்பனை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் முனியப்பன் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழக்க, விஷயம் பொம்மிடி காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.