தமிழகம்

14 வயது சிறுமியை காதல் பெயரில் சீரழித்த காமுகன்.. கடத்தி சென்று நடந்த பயங்கரம்..!

Summary:

14 வயது சிறுமியை காதல் பெயரில் சீரழித்த காமுகன்.. கடத்தி சென்று நடந்த பயங்கரம்..!

14 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அருகாமையில், ஒரு கிராமத்தில் 9ஆம்  வகுப்பு பயின்று வரும் சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.

இதனையறிந்த மாணவியின் பெற்றோர், மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு என பல இடங்களிலும் சென்று தேடியுள்ளனர். இருப்பினும் மாணவி கிடைக்காத காரணத்தால், பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், பென்னாகரம் அடுத்த சக்கில்நத்தம் பகுதியில் வசித்து வருபவர் செல்வன் மகனான, மெக்கானிக் கிருஷ்ணன் (வயது 24). இவர் மாணவிக்கு திருமண ஆசைகாட்டி தான் பெரிய உத்தமன் போல் மாணவியை கடத்தி சென்றுள்ளார். 

மேலும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தகவலறிந்த  காவல்துறையினர் இருவரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்


Advertisement