15 வயதில் காதல் திருமணம், 19 வயதில் மர்ம மரணம்.. அம்மாவை உதறிவிட்டுச்சென்ற மகளுக்கு நேர்ந்த துயரம்.!

15 வயதில் காதல் திருமணம், 19 வயதில் மர்ம மரணம்.. அம்மாவை உதறிவிட்டுச்சென்ற மகளுக்கு நேர்ந்த துயரம்.!


Dharmapuri 19 Aged Girl Death Mystery 

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம், நெருப்பூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் ஷம்பு (வயது 38). கணவர் மணி. 15 ஆண்டுகளுக்கு முன்னதாக மணி தனது மனைவி சம்புவை பிரிந்து சென்றுள்ளார். தம்பதிகளுக்கு மகன், மகள் என 2 குழந்தைகள் இருந்துள்ளனர். 

மகள் விசாலினி (வயது 19), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே திருமணம் செய்துகொண்டுள்ளார். ரமேஷ் என்பவரை காதலித்து வந்த அவர், தனது 15 வயதில் திருமணம் செய்துகொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக பொன்னகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாலினி - ரமேஷ் தம்பதிக்கு பெண் குழந்தையும் இருக்கிறது. 

இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், ரமேஷின் குடும்பத்தாரும் விஷாலினியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று தனது தாய்க்கு தொடர்புகொண்டு, விசாலினி பிரச்சனையை சொல்லி அழுதுள்ளார். 

இந்நிலையில், நேற்று காலை விசாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக ஷம்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மகளின் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, விசாலினி சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த ஏரியூர் காவல் துறையினர் விஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சம்பு அளித்த புகாரின் பேரில் விசாரணையும் நடந்து வருகிறது.