#BREAKING | ஜூலை 20 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

#BREAKING | ஜூலை 20 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!



demonstration-on-july-20-against-price-hike

ந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பல மாநிலங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது மேலும், அத்தியாவசிய பொருட்களும் விலை ஏற்றமடைந்துள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் அவர்:-

"அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதனை திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண ஏழை எளிய மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனது குடும்ப நலனை மட்டுமே காலத்தில் கொண்டு மத்திய அரசின் மீது திமுக அரசு பழி போடுகிறாது. பத்திர பதிவுத்துறையில் கட்டணங்களை உயர்த்தி மக்கள் மேலும் கடனாளி ஆக்க பார்க்கிறது திமுக அரசு.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து ஜூலை 20ஆம் தேதி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.