தமிழகம்

டெல்டா மாவட்ட கவிஞன் பெண்களுக்காக எழுதிய கவிதை: படிக்கும்போதே கண்ணீர் தாரையாய் வடிகிறது!.

Summary:

delta district poet write about girl


  

எங்கோ
யாரோ இருவருக்கு 
மகளாக பிறந்தாள்.. 
எனக்கு 
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த 
ஆசைகளை கனவுகளை 
மறந்து விட்டாள்

இப்போது 
நான் அழுதால் அழுகிறாள் ..
நான் சிரித்தால் சிரிக்கிறாள்.. 
நான் துடித்தால் துடிக்கிறாள்..
எனக்காகவே வாழ்கிறாள்..

 
ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்... 

காலையில் 
நான் எழும்புவதற்கு முன்பு 
அவள் எழுந்து விடுகிறாள்... 

இரவில் 
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் 
நான் வரும் வரை 
தூங்காமல் விழித்திருக்கிறாள்... 

மாதவிடாய் 
வலி அவளை கொல்லும் போதும் 
சிரித்துக் கொண்டே 
என் ஆடைகள் துவைக்கிறாள்... 
வீட்டை சுத்தம் செய்கிறாள் 
அன்பாக பேசுகிறாள் 
அனைத்து வேலைகளையும் 
சளைக்காமல் செய்கிறாள்... 

சில இரவுகளில் 
கட்டிலில் கலந்து 
இனிப்பான இன்பம் தருகிறாள்..

ஓர் நாள் 
கர்ப்பம் ஆகி விட்டேன் என 
காதுக்குள்  சொல்லி 
மார்பில் சாய்ந்தால்.. 

பக்குவமாக 
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்.. 

அவசரமாக 
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்..

ஒரு தாதிப் பெண் 
என்னையும் உள்ளே 
வர சென்னாள்... 

இப்போது
அவள் அருகில் நான்.. 

கத்தினால் 
கதறினால் 
ஏதேதோ செய்தால்... 

வலியால் 
அவள் துடிப்பதை பார்த்து 

என்னால் 
தாங்க முடியவில்லை 

அழ வேண்டும் என்றும் 
நான் நினைக்க நினைக்கவில்லை... 

ஆனால்
என்னை அறியாமல் 
கண்ணீர் வருகிறது 
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று 
எனக்கு தெரியவில்லை... 

சதை கிழிந்து 
குழந்தை வெளியில் வரும் போது 

அவள் 
அடைந்த வலியை 
கடவுள் கூட கவிதையில் 
சொல்லிவிட முடியாது... 

பாதி குழந்தை 
வெளியில் வந்திருகையில் 

வலி தாங்க முடியாமல் 
கைகள் இரண்டையும் எடுத்து 
கும்பிட்டு அழுதால்.. 

எவ்வளவு 
வலி இருந்தால் 
அவள் கும்பிட்டு அழுதிருப்பால் 
என்று நினைக்கும் போது 

நான் துடிதுடித்து 
அவளை இருக அணைத்து கொண்டேன்... 

ஒரு பெரிய 
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால் 

ஒரு சில 
நிமிடங்களில்

குழந்தையை கையில் 
கொடுத்தார்கள்.. 

நான் 
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்... 

அவள்
அனுபவித்த வலி என்பது 
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன். 

மரியாதை 
செய்யுங்கள் 
எம் இறைவிகளுக்கு 
நான் நேசிக்கும்  மனைவிக்காகவும் 
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும் 
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும் 

இந்த 
வரிகளை 
சமர்ப்பிக்கிறேன் 

நன்றிகள் கோடி 
பெண்களே...

 

pregnant women delivery painand crying க்கான பட முடிவு


Advertisement