நள்ளிரவில் பயங்கரம்... கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட டெலிவரி பாய்... 3 பேரிடம் காவல்துறை விசாரணை.!

நள்ளிரவில் பயங்கரம்... கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட டெலிவரி பாய்... 3 பேரிடம் காவல்துறை விசாரணை.!


delivery-boy-brutally-murdered-in-nellai-police-capture

நெல்லையில் டெலிவரி பாய் நள்ளிரவில்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வீரராகவபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் முகேஷ். இவருக்கு வயது 30. இவருக்கு   திருமணமாகி சுபிதா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.

tamilnaduஇந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் வெகு நேரமாகியும்  வீடு திரும்பாததால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியிருக்கின்றனர். அப்போது சாலையில் இவரது இரு சக்கர வாகனம் கிடந்திருக்கிறது. அதனை ஒட்டிய முட்புதரில் முகேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.

tamilnaduஇதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக அழகு முத்து(24), கிரி(20), முருகேஷ்(24) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.