டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! எவ்வளவு தெரியுமா?deepavali-bonus-to-tasmac-workers

தமிழகம்தோறும் நாளுக்கு நாள் மதுபான விற்பனை அதிகரித்துகொண்டே வருகிறது. மேலும் குடிமக்கள் மற்றும் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக்குகள் அரசால் எடுத்து நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் அங்கு பணியாற்றும் சூப்பர் வைசர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவருக்கும் அரசாங்கமே சம்பளம் வழங்கி வருகிறது.

tasmac

இந்நிலையில், தீபாவளி பண்டிகை விரைவில் வரவுள்ளதை முன்னிட்டு தமிழக அரசு, டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  20% போனஸ் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்பார்வையாளர்கள் , விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு போனஸாக 16 ஆயிரத்து 800 ரூபாயும், உதவி விற்பனையாளர் மற்றும் பிற ஊழியர்களுக்கு போனஸாக 16 ஆயிரத்து 300 ரூபாயும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.