தமிழகம்

என் மனைவியை நான் இப்படியா பார்க்க வேண்டும்.! பதறிய கணவர்.. காட்டு பகுதியில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்...

Summary:

Deepa died in forest area namakal

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் - தீபா தம்பதியினர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். தீபா கணவருடன் சேர்ந்து விவசாய தொழிலுக்கு உதவியாகவும், ஆடு, மாடுகளை மேய்த்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் துணிகளை துவைத்து விட்டு மாடுகளை கீரைக்காடு வனப்பகுதியில் மேய்க்க ஓட்டி சென்றுள்ளார். மாடு மேய்க்க சென்ற தீபா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதறிய குடும்பத்தினர் அங்கும், இங்கும் தேடி பார்த்துள்ளனர். மேலும் போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர். 

அதனை அடுத்து கீரைக்காடு வனப்பகுதியில் ஒரு இளம்பெண்ணின் உடல் இரத்தக்காயங்களுடன், நிர்வாணமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து அங்கு சென்று பார்த்த போது அது தீபா என தெரியவந்ததை அடுத்து நடேசன் கதறி துடித்துள்ளார். 

போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement