தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தண்ணீர் குடிக்கும் போது பல்லை விழுங்கிய பெண்.! பரிதாபமாக போன உயிர்.! ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்.!
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ராஜலட்சுமி. 43 வயது நிரம்பிய இவருக்கு 3 பற்கள் சேதமடைந்து இருந்தது. இதனால் கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக மூன்று செயற்கை பற்களைக் கட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் தண்ணீர் குடிக்கும்போது மூன்று பற்களில் ஒரு பல் கழண்டு வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எதுவும் தெரியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பிறகு அவர் மீண்டும் உடல் நிலை பாதிப்படைந்து திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்