தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தகதகத்த தீக்குண்டம்.. தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் மரணம்.!

சென்னை புழல் காவாங்கரை திருமலை நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சந்திரா. 45 வயது நிரம்பிய இவர், கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்ற புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் கலந்துகொண்டார்.
சந்திரா தீ மிதி திருவிழாவில் கலந்துகொண்ட சிறிது நேரத்திலேயே தடுமாறி தீக்குண்டத்தில் விழுந்து முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்தார்.
எதிர்பாராதவிதமாக தீக்குண்டத்தில் தவறி விழுந்து பலத்த தீக்காயம் அடைந்த சந்திராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்திரா, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.