தமிழகம்

87 வயது மாமியாருக்கு இப்படியொரு ஆசையா? குழந்தைபோல தூக்கிச்சென்று மருமகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Summary:

daughter in law carrying mother in law for vote

சென்னை பூந்தமல்லி ஒன்றியம், சென்னீர்குப்பம் ஊராட்சி ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் பாண்டியம்மா. இவரது மாமியார் பாப்பம்மாள். இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் துவங்கியுள்ளது இதில் ஏராளமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 87 வயது நிறைந்த பாப்பம்மாள்,  தானும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தனது ஆசையை அவரது மருமகள் பாண்டிய ம்மாவிடம் கூறியுள்ளார்.

 இதனைக் கேட்டு பாண்டியம்மா அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பார்வை சரியாக தெரியாத நிலையில்,  சுத்தமாக நடக்க முடியாத போது எப்படி நீங்கள் வாக்களிக்கச் செல்ல முடியும் எனவும் பாண்டியம்மா அவரிடம் கேட்டுள்ளார்.ஆனால் பாப்பம்மாள் தான் ஒட்டு போட்டே ஆகவேண்டும் என பிடிவாதமாக கட்டாயப்படுத்திய நிலையில் அவர் சற்றும் யோசிக்காமல் ஆட்டோ ஒன்றை வரவழைத்து அதில் பாப்பம்மாவை  ஓட்டு போட அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து செல்ல ஏதேனும் வீல்சேர்  இருக்கிறதா என அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.ஆனால் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் சற்றும் யோசிக்காமல் தனது மாமியாரை குழந்தை போல கையில் தூக்கி சென்று வாக்களிக்க செய்துள்ளார் . தனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. 
 


Advertisement