என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
இப்படி ஒரு கொடுமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது.! ஆசையாக வளர்த்த மகளை தந்தை மகன்கள் சீரழித்த கொடூரம்.!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் உறவினர் ஒருவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கல்லூரியில் படித்து வரும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை மற்றும் மகன்கள் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த கல்லூரி மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலத்தில், நான் தற்போது சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். நான் பிறந்தவுடன் எனது தாயார் இறந்து போனதால் பிறந்து ஒரு மாதம் ஆனவுடன் என்னை தத்து கொடுத்து விட்டனர். ஷெரீப் மற்றும் அவரது மனைவி ஜமீலா ஆகியோர் என்னை தத்து எடுத்து மகளாக வளர்த்து வந்தனர்.
ஆனால் 12ம் வகுப்பு படிக்கும்போது பருவ வயதை எட்டியதில் இருந்தே மாணவிக்கு, வளர்ப்பு தந்தை ஷெரீப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து வளர்ப்பு தாய் ஜமீலாவிடம் கூறி அழுதபோது எனது கணவர் சொல்படி கேட்டு நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஷெரீப்பை தவிர அண்ணன்களான இம்தியாஸ், இர்பான், ஹனீப் ஆகியோர் தனது தந்தையை போன்று ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாணவியை மிரட்டி தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், தான் கர்ப்பமானாதால் ஷெரீப், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைக்க ஏற்பாடு செய்தார். இதன்பிறகும் அவர்களது கொடுமை தொடர்ந்தது. இந்தநிலையில் எனது உறவினரிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை செல்போன் மூலம் கூறி அழுதேன். அதற்கு உடனடி உதவி கிடைத்தது என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஷெரீப், அவரது மனைவி ஜமீலா, மகன்கள் இம்தியாஸ், இர்பான் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.