#JustIN: அடுத்த 3 மணிநேரத்திற்கு மக்களே உஷார்.. ரெட் அலர்ட் எச்சரிக்கை.!



Cyclone Fengal Touch the Land now going Towards 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் இன்று அதிகாலை 4 மணிமுதல் கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கிறது. 

கரையை கடக்கத் தொடங்கியது

பெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் பகுதிகளில் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 05:30 மணிக்கு மேல், புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்னும் 3 மணிநேரம் முதல் 4 மணிநேரத்திற்குள் புயல் கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: கரையை கடக்கத் தொடங்கியது ஃபெஞ்சல் புயல்.. வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Cyclone Fengal

அடுத்த 3 மணிநேரத்திற்கு ரெட் அலர்ட்

இதனால் அடுத்த 3 மணிநேரத்திற்கு, இரவு 10 மணிவரையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: செங்கல்பட்டு, கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்; மக்களே ரெடியா இருங்க.!