#Breaking: கரையை கடக்கத் தொடங்கியது ஃபெஞ்சல் புயல்.. வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



 Cyclone Fengal Touch the Land now going Towards 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் இன்று அதிகாலை 4 மணிமுதல் கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கிறது. 

பெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் பகுதிகளில் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 05:30 மணிக்கு புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்னும் 3 மணிநேரம் முதல் 4 மணிநேரத்திற்குள் புயல் கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை வாய்ப்புகள் அதிகம்

இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய காரணத்தால், படிப்படியாக காற்று குறைந்தாலும், அதிக கனமழைக்கான வாய்ப்புகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: விரைந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! 

Cyclone Fengal

மழை மேகங்கள் குவிவு

கிட்டத்தட்ட ஒரு வார காலமாக பல நிலைகளை அடைந்து புயல் கரையை கடந்து வருகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. புயலின் கண் புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளில் நகர்ந்து வருகிறது. முன்பகுதிகளில் இருக்கும் மழை மேகங்கள் காரணமாக, சென்னையில் கடும் மழை பெய்து வந்தது.

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அம்மாவட்டங்களில் இரவுகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டத்திலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. .

இதையும் படிங்க: #Breking: உருவானது ஃபெங்கல் புயல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!