புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
டாஸ்மாக் சரக்கில் செத்துக்கிடந்த பல்லி.. கட்டிங் அடித்து உயிர் பயத்தில் அலறிய நபர்.. திட்டக்குடியில் சம்பவம்.!
போதைக்காக அரசின் சாராயம் குடித்த நபருக்கு கண்ணில் மரண பயம் காண்பிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கீழ ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர் சம்பவத்தன்று திட்டக்குடி - பெருமலை சாலையில் இருக்கும் அரசு மதுபானக்கடையில், குடிக்க மதுபானம் வாங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: பணியின்போதே சோகம்.. கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்..!
அதில் பாதியளவை ஊற்றிக் குடித்துவிட்டு, பின் மீண்டும் இருக்கும் சாராயத்தை குடிக்க முற்பட்டுள்ளார். அப்போது, தான் ஏற்கனவே குடித்த சாராயத்தில் பல்லி/அரணை (எந்த பூச்சி என உறுதி செய்யப்படவில்லை) மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக அவருக்கு முதுகுத்தண்டு வலி, படபடப்பு, வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிபோனவர், அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு விபரத்தை கூறி இருக்கிறார்.
TasmacFile Pic
இதனையடுத்து, விரைந்து வந்த அவசர ஊர்தி பணியாளர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். திட்டக்குடி மருத்துவமனையில் தற்போது கொளஞ்சிநாதன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுபானம் உடல்நலத்திற்கு தீங்கானது என தெரிந்தும் அவர் அதனை குடித்த நிலையில், அதில் அவருக்கே தெரியாமல் செத்துக்கிடந்த பல்லி உயிர் பயத்தை காண்பித்துள்ளது. மேலும், தொழிற்சாலையில் உயரிய முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் மதுவில் பல்லி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 10 ரூபாய் ஜூஸ் குடித்து படுத்த படுக்கையாக சிறுவன்; கடலூரில் பேரதிர்ச்சி.. அலட்சியத்தில் அதிகாரிகள்?.! தாய் குமுறல்.!