தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கதவை திறந்து உறங்கியவருக்கு எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. மக்களே உஷாராக இருங்கள்.. பட்டப்பகலில் துணிகரம்.!
உடல் களைப்பினால் கதவை திறந்துவைத்து உறங்கியவரின் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, செல்போன் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் நேற்று தனது வீட்டில் உடல் களைப்பினால் கதவை பூட்டாமலேயே உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, இவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், வீட்டில் இருந்த தொலைக்காட்சி மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு சென்றுள்ளார். உறங்கி எழுந்த நாராயணசாமி, தனது பொருட்கள் திருடுபோனதை புரிந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக R2 ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் கைவரிசை காண்பித்தது அம்பலமானது.
மாணிக்கத்தின் செல்போன் நம்பரை வைத்து, அவரின் இருப்பிடம் அறிந்த காவல் துறையினர், மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.