தமிழகம்

5 மாத கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு கஷாயம்.. வரதட்சணை கேட்டு கணவன், மாமியார் வெறிச்செயல்.!

Summary:

5 மாத கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு கஷாயம்.. வரதட்சணை கேட்டு கணவன், மாமியார் வெறிச்செயல்.!

திருமணம் முடிந்த 10 மாதத்திற்குள் கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை செய்த கணவனும், மாமியாரும் பெண்ணுக்கு கஷாயம் என கருக்கலைப்பு மருந்து கொடுத்து கருவைகலைத்த கொடுமை நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிபுலியூரில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கும், வனஅலுவலராக பணியாற்றி வந்த 29 வயது பெண்ணுக்கும், கடந்த மே மாதத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போதே பெண் வீட்டார் சார்பில் வரதட்சணை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

சரவணன் மற்றும் அவரின் தாய் பெண்ணிடம் கூடுதலாக 25 சரவண நகை, ரூ.5 இலட்சம் ரொக்கம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். கூடுதல் வரதட்சணை கொடுக்க பெண் மறுப்பு தெரிவித்த காரணத்தால், சரணவனின் வீட்டார் பெண்ணை தினமும் திட்டி மனரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி கஷாயம் என்ற பொருளை சரவணன் மற்றும் அவனின் தாயார் கொடுத்துள்ளனர். இதனை குடித்த பெண்ணுக்கு கருகலைந்த நிலையில், பெண்மணி உண்மையை உணர்ந்துள்ளார். பின்னர், இதுதொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சரவணன், சரவணன் தாய் மல்லிகா ஆகியோரை கைது செய்துள்ளனர். 


Advertisement