விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது சோகம்; 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஆதி கிருஷ்ணன் (வயது 12). விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பிக்கப்ட்ட நிலையில், நேற்று மாலை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
சிறார்கள் தத்தளிப்பு
ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஆதி கிருஷ்ணனும், அவரின் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து விநாயகர் சிலைகளை கரைக்க அங்குள்ள ராமர் குளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறார்கள் திடீரென குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: இன்பச் சுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.. கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி.!
ஒருவர் பலி
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் விரைந்து 4 சிறார்களை மீட்ட நிலையில், நீருக்குள் சிக்கிய ஆதி கிருஷ்ணன் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; ஒருவர் பரிதாப பலி.!