அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
2 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்.. மருத்துவமனையில் இருந்து கண்ணீருடன் தாய் வெளியிட்ட வீடியோ.!
நெய்வேலியில் இரண்டு வயது குழந்தையை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் சபரிநாத். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதுடைய மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நெய்வேலி மெயின் பஜாரில் இருக்கும் கோல்டன் ஜூப்ளி பார்க்கில், தமிழரசி - சபரிநாத் தம்பதியின் 2 வயது மகன் விளையாடிக்கொண்டிருந்தான்.
தாத்தாவுடன் பூங்காவிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அப்போது அங்கு வந்த நான்கு தெரு நாய்கள் சேர்ந்து சிறுவனை கடித்து குத்தறியுள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு நெய்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சிறுவனின் தாய், "இது போன்ற நிகழ்வு தனக்கு ஏற்பட்டது போல, வேறு எந்த பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடாது. குழந்தைகளை பொது இடங்களில் தனியாக விட வேண்டாம். இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.