மாமியார் வீட்டிற்கு வந்த மருமகன் வெட்டிபடுகொலை.. கொல்லைப்புறத்தில் நடந்தது என்ன?..! மனைவியிடம் விசாரணை.!!
மாமியார் வீட்டிற்கு வந்த மருமகன் வெட்டிபடுகொலை.. கொல்லைப்புறத்தில் நடந்தது என்ன?..! மனைவியிடம் விசாரணை.!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், பிச்சிபாளையம் காலனி தெருவில் வசித்து வருபவர் இளையராஜா (வயது 42). இவர் சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அனிதா (வயது 35). அனிதாவின் சொந்த ஊர் கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூர் அருகேயுள்ள நெய்வாசல் ஆகும்.
கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக இளயகாராஜா - அனிதா தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் அனுஹாசினி என்ற 10 வயது மகளும், நிரஞ்சன் என்ற 7 வயதும் மகனும் உள்ளனர். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 4 வருடத்திற்கு முன்னர் தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், 4 வருடத்திற்கு பின்னர் இளையராஜா அனிதாவை பார்க்க நெய்வாசல் கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். இரவில் மனைவி அனிதாவின் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இன்று காலையில் இளையராஜா வீட்டில் இல்லாத நிலையில், அவரை மனைவி மற்றும் உறவினர்கள் தேடி இருக்கின்றனர்.
அப்போது, அனிதாவின் வீட்டு கொல்லைப்புறத்தில் உடலில் வெட்டுக்காயத்துடன் இளையராஜா பிணமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பந்தநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் அனிதாவிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப சண்டைக்கு பின்னர் 4 வருடங்கள் கழித்து மாமியாரின் வீட்டிற்கு மனைவியை பார்க்க வந்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.