புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிரியாணியில் ஈ, தயிரில் மீன் முட்டை.. பிரபல உணவகத்தில் சர்ச்சை; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!
கடலூர் நகரில் உள்ள இம்பிரியர் சாலையில் பிரபலமான அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று உணவகத்திற்கு சென்ற ஒருவர் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். மற்றொருவர் தயிர் சாதம் வாங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரியாணியில் ஈ இறந்து கிடந்த நிலையில், அதனைகவனித்த இளைஞர் மீண்டும் உணவகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். தயிர் வாங்கியவருக்கு தயிரில் மீன் முட்டை இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
இதனை கண்டுகொள்ளாத உணவகத்தின் மேலாளர், அதனை எடுத்து கீழே போட்டு உணவை சாப்பிடுங்கள் என்று அலட்சியத்துடன் பதில் கூறியுள்ளார்.