நிதி நிறுவன மேலாளரிடமே கந்துவட்டி வசூல்.. ரூ.5 இலட்சம் கடனுக்கு ரூ.40 இலட்சம் வட்டி.. விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!

நிதி நிறுவன மேலாளரிடமே கந்துவட்டி வசூல்.. ரூ.5 இலட்சம் கடனுக்கு ரூ.40 இலட்சம் வட்டி.. விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!



Cuddalore Chidambaram Private Finance Company Manager Suicide due to Usury Interest Loan

தனியார் நிதி நிறுவன மேலாளர் கந்துவட்டி பிரச்சனையில் தற்கொலை செய்துகொண்ட சோகம் சிதம்பரம் அருகே நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், ஆதிவராகநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் இளஞ்சூரியன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இளஞ்சூரியன் சிதம்பரத்தில் பழமண்டி நடத்தி வரும் நபரிடம் ரூ.5 இலட்சம் பெற்றுள்ளார். தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் கந்துவட்டி வசூல் செய்த நபர்களால், தற்போது வரை ரூ.17 இலட்சம் மதிப்பிலான கார், மனைவியின் தாலி சங்கிலி வரை இளஞ்சூரியன் கொடுத்துள்ளார். 

மேலும், கூடுதலாக ரூ.23 இலட்சம் பணம் கொடுத்ததால் தான் கடன் தொகை அடையும் என கந்துவட்டி கும்பலின் அடாவடி காரணமாக, மனஉளைச்சலுக்கு சென்ற இளஞ்சூரியன், கடந்த 2 ஆம் தேதி சிதம்பரம் காவல் நிலையம் அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இந்த தகவலை அறிந்த அவரின் உறவினர்கள், இளஞ்சூரியனை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவே, சிகிச்சை பெற்று வந்தவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 

Cuddalore

இளஞ்சூரியனுக்கு அனிதா என்ற மனைவி மற்றும் 4 வயதில் கிருத்திஸ் என்ற மகனும் இருக்கிறார். அனிதா தற்போது 2 ஆவதாக கருவுற்ற நிலையில், கந்துவட்டி கொடுமையால் இளஞ்சூரியன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அனிதா சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.