ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
#Watch: அரசு மருத்துவமனையே எங்களுக்கு அடைக்கலம்.. மருத்துவமனை படுக்கையில் உலாவிய நாய்கள்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், அம்மாவட்டத்தின் முக்கிய நகர்களில் ஒன்றாக இருக்கிறது. இங்குள்ள சுற்றுவட்டார கிராம மக்களின் மருத்துவ வசதிக்காக, அரசு சிதம்பரம் நகரில் அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு மருத்துவமனை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
சிதம்பரம் கடலூர் அரசு மருத்துவமனையில் (ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி) அவல நிலை.நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கையில் நாய்கள் விளையாடுகின்ற அவலம் @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL pic.twitter.com/VxTb6md5wb
— Venkatesh T (@venkateshadmk) January 23, 2025
இதையும் படிங்க: "செத்துப்போ" - காதலன் சொன்ன ஒரே வார்த்தை.. உயிரைவிட்ட காதலி.. தாய் கண்ணீர் குமுறல்.!
அதாவது, சுகாதாரத்திற்கு கேள்விக்குறியை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை கழிவறைகள் இருப்பதும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளில் கட்டிலில் நாய் ஒன்று படுத்து இருப்பதும் தொடர்பான காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெண்ணாடம்: கழுத்தில் கத்தி.. 16 வயது சிறுமியை நடுரோட்டில் பதறவைத்த இளைஞர்.. பரபரப்பு சம்பவம்.!